மழை வேண்டி நெல்லை, பாபநாசம் கோவில்களில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு யாகம்

மழை வேண்டி நெல்லை, பாபநாசம் கோவில்களில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:00 AM IST (Updated: 23 Jun 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

மழை பெய்யவேண்டி நெல்லை நெல்லையப்பர் கோவில், பாபநாசம் பாபநாச நாதர் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு யாகம் நேற்றுநடந்தது. இதில் அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்றார்.

நெல்லை, 

மழை பெய்யவேண்டி நெல்லை நெல்லையப்பர் கோவில், பாபநாசம் பாபநாச நாதர் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு யாகம் நேற்றுநடந்தது. இதில் அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்றார்.

நெல்லையப்பர் கோவில்

தமிழகம் முழுவதும் மழை பெய்யவேண்டிநெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், நெல்லையப்பர் கோவிலில் நேற்று காலையில் சிறப்பு யாகம் நடந்தது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். மனோகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, பாப்புலர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாபநாசம் கோவில்

இதேபோன்று விக்கிரமசிங்கபுரம் நகர அ.தி.மு.க. சார்பில், மழை வேண்டி, பாபநாசம் பாபநாசநாதர்சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. பட்டர்கள் சோமசுந்தரம், சங்கர சுப்பிரமணியன், ஹரிகரன் ஆகியோர் வருண ஜெபத்தை நடத்தினர்.

கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், அ.தி.மு.க. பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், அருண், சிவந்திபுரம் முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் பிராங்கிளின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story