நிலத்தடி நீரை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள்
நிலத்தடி நீரை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்தார்.
வில்லியனூர்,
நீர் அளவை உயர்த்தும் அவசியத்தை கருத்தில் கொண்டு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பருவமழைக்கு முன், நீர்நிலைகளை தூர் வாருவது என மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் ஆராயப்பட்டு, முதற்கட்டமாக, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட, வில்லியனூர் வருவாய் கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மூர்த்திகுளம் தூர் வார தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பொதுப்பணித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஒருங்கிணைந்து செய்திருந்தது. பொதுப்பணித் துறை செயலர் அசோக்குமார், மாவட்ட கலெக்டர் அருண், உதவி கலெக்டர் (தெற்கு) சஷ்வத் சவுரப், பொதுப்பணி துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு மூர்த்திகுளம் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது நீர்நிலைகளை தூர்வாரும் பணி அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அருண் கூறினார்.
அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், புதுவை மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில் புதிய ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்கும் பணியை அரசு செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு புதுவை மாநிலத்தில் உள்ள 634 குளங்கள், 25 ஏரிகள் தூர் வாரப்படும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

Related Tags :
Next Story