மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்


மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:00 AM IST (Updated: 23 Jun 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

நாமக்கல்,

ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வேதேச யோகா தினம் நடந்தது. பள்ளியின் தலைவர் சுந்தரராஜூ தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் கணேசன், இயக்குனர் இளையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா பயிற்சியை பள்ளியின் இயக்குனர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

யோகா பயிற்சியாளர் பிரியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் மூலம் சூரியநமஸ்காரம், வீரபத்யாசனா, பம்மாசனா உள்பட பல்வேறு யோகா பயிற்சியை செய்தனர். இதில் ஈஷா யோகா மையப் பயிற்சியாளர்கள், பள்ளியின் முதல்வர் பிரவீனா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காளிப்பட்டி மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளியின் முதல்வர் ஆனந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக யோகா பாடப்பிரிவு பேராசிரியர்கள் ஜெயந்தி பத்மநாபன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டுடனர்.

ஆன்லைன் உலக சாதனை நிகழ்ச்சியில் மஹேந்திரா பள்ளியை சேர்ந்த 202 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். பின்னர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பள்ளிக்கான சான்றிதழை முதல்வர் பெற்று கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் யோகா ஆசிரியர் நீலகிருஷ்ணன, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் மேல்நிைலப்பள்ளியில் யோகா தினம் நடைபெற்றது. இதையொட்டி பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தனர்.

யோகா பயிற்சியாளர்கள் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து புள்ளிகள் வழங்கினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.கே.வி. கல்வி நிறுவனங்களின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, பொருளாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.

பரமத்திவேலூர் அருகே உள்ள பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளியின் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைத்தலைவர் சுசிலா ராஜேந்திரன், துணை செயலாளா் தமிழ்செல்வி தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து யோகாவின் அவசியத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகள் பல்வேறு விதமான யோகாசன பயிற்சி செய்தனர். இதில் பள்ளியின் இயக்குனர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு அருகே வையப்பமலை கவிதாஸ் கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நடந்தது. கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் விஜயகுமார் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் நேரு யுவகேந்திரா கணக்காளர் வள்ளுவன், ஆலோசனை குழு உறுப்பினர் தில்லை சிவகுமார், நாமக்கல் மாவட்ட புதிய பாரதம் அறக்கட்டளை நிறுவனர் ரஞ்சித், நேரு யுவகேந்திரா செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மணிகண்டன், தேர்வுக்குழு உறுப்பினரும் யோகா பயிற்றுனருமான ராஜேந்திரன், நாமக்கல் நேரு யுவகேந்திரா அலுவலக பொறுப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகள் அளித்தனர். மாணவர்களும் ஆர்வத்துடன் பங்ேகற்று ஆசனங்களை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் செய்திருந்தார்.

Next Story