ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் - தி.மு.க. பொறுப்பாளர் வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பேசினார்.
ராமநாதபுரம்,
தமிழ்நாடு முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டு குடிநீர் வழங்கக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகவேல், திசைவீரன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பேசியதாவது:- தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் பெண்கள் குடிநீர் எடுப்பதற்காக காலி குடங்களுடன் பல கிலோமீட்டர் நடந்து சென்று நள்ளிரவில் கூட தீப்பந்தங்களுடன் குடிநீர் ஆதாரத்தை தேடி அலைகின்றனர். கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியின் போது ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக 1996-99ம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களை அப்போதைய முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி தந்தார். இதேபோல 2007-ல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கருணாநிதி மற்றும் ஸ்டாலின் செயல்படுத்தினர். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு குடிநீர் திட்டம் கூட நிறைவேற்றப்படவில்லை. கடலாடி பகுதியில் நிலத்தடியில் சொட்டுச்சொட்டாக ஊறும் குடிநீரை அப்பகுதி பெண்கள் விடிய விடிய காத்திருந்து சேகரிக்க வேண்டிய அவலநிலையில் உள்ளனர். பொதுமக்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்து வைக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்கும் பணியை முடுக்கி விட வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் யூனியன் வாரியாக நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டு தண்ணீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story