என்ஜின் பழுதாகியதால் மலை சுரங்கப்பாதையில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மூச்சுத்திணறலால் பயணிகள் அவதி


என்ஜின் பழுதாகியதால் மலை சுரங்கப்பாதையில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மூச்சுத்திணறலால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 23 Jun 2019 4:00 AM IST (Updated: 23 Jun 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

மலை சுரங்கப்பாதையில் என்ஜின் பழுதாகி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்றதால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மும்பை,

மலை சுரங்கப்பாதையில் என்ஜின் பழுதாகி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்றதால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

எக்ஸ்பிரஸ் ரெயில்

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சம்பவத்தன்று காலை ரத்னகிரியை கடந்து வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் உக்சி-போக்லே ரெயில் நிலையங்களுக்கிடையே கர்நாடே என்ற மலை சுரங்கப்பாதையில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது ரெயில் என்ஜின் திடீரென பழுதானதால் நடுவழியில் நின்றது. வெகுநேரமாக ரெயில் மலை சுரங்கப்பாதையில் சிக்கி கொண்டதால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மாற்று என்ஜின்

என்ஜின் டிரைவர் சம்பவம் குறித்து அருகில் உள்ள சங்கம்னேர் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ரெயில்வே அதிகாரிகள் மாற்று என்ஜினை அங்கு அனுப்பி வைத்தனர். மலை சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த ரெயில் மாற்று என்ஜின் மூலம் அங்கிருந்து சங்கம்னேர் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

ரெயில் அங்கு வந்தவுடன் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பெரும்பாலான பயணிகள் அவதி அடைந்தனர்.

கொங்கன் ரெயில்வே வழித்தடத்தில் உள்ள இந்த மலை சுரங்கப்பாதை 7 கிலோ மீட்டர் நீளமுடையது. இது இந்தியாவின் 2-வது நீளமான மலை சுரங்கப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story