ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 4 பேர் கைது கேரளாவை சேர்ந்தவர்கள்


ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 4 பேர் கைது கேரளாவை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:00 AM IST (Updated: 23 Jun 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மும்பை,

ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

ஸ்கிம்மர் கருவி

மும்பை டோங்கிரி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் சம்பவத்தன்று தம்பதி பணம் எடுக்க சென்றனர். அப்போது எந்திரத்தில் ஸகிம்மர் கருவி பொருத்தி இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் வங்கி மேலாளரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து வங்கி மேலாளர் ஸ்கிம்மர் கருவி பொருத்திய நபரை கையும் களவுமாக பிடிக்க திட்டம் போட்டார். அவர் வாடிக்கையாளர் போல நடித்து ஸ்கிம்மர் கருவி பொருத்திய ரபீக் என்ற வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

கேரளாவை சேர்ந்தவர்கள்

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இந்த மோசடி சம்பவத்தில் அடில் முகமது, அகமது ஜபீர், முகமது ஆனஸ் ஆகிய மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களிடம் இருந்து மடிக்கணினி, போலி அட்டைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் வேறு எங்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி மோசடியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story