ஆட்டோவில் செல்லும்படி கூறியதால் தகராறு போக்குவரத்து போலீஸ் ஏட்டுவை தாக்கிய இறைச்சி கடை ஊழியர் கைது
போதையில் இருப்பதால் ஆட்டோவில் செல்லும்படி கூறியதால் ஆத்திரத்தில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய இறைச்சி கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஏட்டுவாக பணியாற்றி வருபவர் முத்துகருப்பசாமி(வயது 49). இவர், நேற்று அய்யப்பன்தாங்கல் பகுதியில் நடந்த விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் அய்யப்பன்தாங்கல் அருகே சென்றபோது, அவருக்கு முன்னாள் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்ட போலீஸ் ஏட்டு முத்துகருப்பசாமி, மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி, சாலையில் விழுந்து கிடந்த வாலிபருக்கு உதவி செய்தார்.
அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஏட்டு முத்துகருப்பசாமி, மோட்டார்சைக்கிளை அங்கே நிறுத்தி விட்டு ஆட்டோவில் செல்லுமாறு அந்த வாலிபரிடம் கூறினார். இதனால் ஏட்டுவுக்கும், போதையில் இருந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர், திடீரென ஏட்டு முத்துகருப்பசாமியின் முகத்தில் ஓங்கி அடித்ததாக தெரிகிறது. இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பொதுமக்கள், வாலிபரை பிடித்து போரூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பூந்தமல்லி கரையான்சாவடியை சேர்ந்த மதார்செரீப்(வயது 22) என்பதும், அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வருவதும் தெரிந்தது. மேலும் அவர் குடிபோதையில் மோட்டார்சைக்கிளில் கிண்டி நோக்கி சென்றபோதுதான் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததும் தெரிந்தது.
இதையடுத்து போக்குவரத்து போலீஸ் ஏட்டுவை தாக்கியதாக மதார்செரீப் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story