தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடிநீர் பிரச்சினை
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் குடிநீர் பிரச்சினையில் அரசுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ மக்களுக்கு தேவையான பணிகளை செய்யாமல், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி மக்களிடையே பீதியை உருவாக்குவதையே வாடிக்கையாக ெகாண்டுள்ளார். இது எந்த வகையிலும் மக்களுக்கு பயன்பாடாக இருக்காது.
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருந்தால், மக்கள் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் அரசியலை ஒதுக்கிவிட்டு, மக்களை காக்கின்ற பணியில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இதுதான் சிறந்த எதிர்க்கட்சியின் இலக்கணம்.
தீர்வாகாது
ஆனால், பிரச்சினையை மையமாக வைத்து ஆர்ப்பாட்டம், கண்டன கூட்டங்கள் நடத்துவது, மக்களை திரட்டி பீதியை உண்டாக்குவது போன்ற தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வது சரியான தீர்வாக இருக்காது என்பது எங்களது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story