வழக்கில் வசூலித்த தொகையை மோசடி செய்த ஏட்டு பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா நடவடிக்கை


வழக்கில் வசூலித்த தொகையை மோசடி செய்த ஏட்டு பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2019 3:15 AM IST (Updated: 24 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் மோட்டார் வாகன வழக்கில் வசூலித்த தொகையை கோர்ட்டில் செலுத்தாமல் மோசடி செய்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி, 

திருச்செந்தூரில் மோட்டார் வாகன வழக்கில் வசூலித்த தொகையை கோர்ட்டில் செலுத்தாமல் மோசடி செய்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

போலீஸ் ஏட்டு

திருச்செந்தூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் கடந்த 1-1-2018 முதல் 31-10-18 வரை எழுத்தராக போக்குவரத்து போலீஸ் ஏட்டு ரஞ்சித்குமார்(வயது 34) என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது 447 மோட்டார் வாகன வழக்குகளில் வசூலித்த அபராத தொகையை கோர்ட்டில் செலுத்தாமல், வழக்கு முடிவுக்கு வந்ததாக போலி எண்களை பதிவு செய்து பணத்தை மோசடி செய்தாராம். தற்போது அவர் காடல்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில் திருச்செந்தூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீஸ் ஏட்டு ரஞ்சித்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவிட்டார்.

Next Story