மாவட்ட செய்திகள்

வருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி + "||" + The resolution against hydrocarbon is to be resolved at the upcoming Gram Sabha meeting on 28th

வருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

வருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
வருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தஞ்சையில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இந்த 8 ஆண்டுகளும் அ.தி.மு.க. தான் ஆட்சியில் உள்ளது. குளம், ஏரி, வாய்க்கால் உள்ளிட்ட பாசன வசதிகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் சாகுபடி நடைபெறாததுடன், கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 90 டி.எம்.சி. உபரிநீர் வங்ககடலில் கலக்கிறது. உபரிநீரை தடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ராசிமணலில் அணைகட்டி பயன்படுத்த தமிழகஅரசுக்கு அனுமதி வழங்க வேண்டும். ராசிமணலில் அணை கட்ட தமிழகத்திற்கு உரிமை உள்ளது. இந்த அணை கட்டும் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யக்கூடாது.


ராசிமணலில் அணை கட்டுவதற்கான தீர்மானத்தை நாளை(25-ந் தேதி) நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) மாலை டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத்உசேனை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன்.

ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடியின் அலுவலகத்தில் விரிவான விளக்க கடிதம் நேரில் வழங்க இருக்கிறேன். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க விவசாயிகளும், அனைத்து அரசியல் கட்சியினரும் முன்வர வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ராசிமணலில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்தமாதம்(ஜூலை) 25-ந் தேதி டெல்லியில் உண்ணாவிரத போராட்டமும், அதற்கு மறுநாள்(26-ந் தேதி) பாராளுமன்ற முற்றுகை போராட்டமும் நடைபெற உள்ளது.

சென்னை குடிநீர் பிரச்சினையை கிருஷ்ணா நதி நீரால் முழுமையாக போக்க முடியவில்லை. காவிரி நீரை வீராணம் ஏரிக்கு கொண்டு சென்று அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிலம்ப போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் உலக சாம்பியனில் தங்கம் வென்ற வீரர் பேட்டி
சிலம்ப போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று உலக சாம்பியன் சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற வீரர் கூறினார்.
2. ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது இல.கணேசன் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
3. அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் கலெக்டர் டி.ரத்னா பேட்டி
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.ரத்னா தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
5. நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் வானதி சீனிவாசன் பேட்டி
நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...