நெல்லை அருகே பஸ் மோதி வக்கீல் பலி
நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வக்கீல் அரசு பஸ்மோதி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,
நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வக்கீல் அரசு பஸ்மோதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
வக்கீல்
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் அருணாசலப்பாண்டியன். இவர் அந்த பகுதியில் முன்னாள் வியாபாரி சங்க தலைவராக இருந்தார். இவருடைய மகன் மகேஷ்(வயது37) வக்கீல்.. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.
இந்தநிலையில் நேற்று மாலையில் மகேஷ், நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நெல்லையில் இருந்து பாபநாசம்நோக்கிசென்ற அரசு பஸ்எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் தூக்கிவீசப்பட்டமகேஷ்படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் முன்னீர்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.அவருடைய உடலை பார்த்துகுடும்பத்தினர்கதறி அழுதது பரிதாபமாக இருந்தது..
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story