மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்


மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 10:45 PM GMT (Updated: 23 Jun 2019 8:45 PM GMT)

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

சேலம்,

சேலம் சாரதா கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் உமாராணி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதனையடுத்து யோகாசன சாலை யோகா பயிற்சி ஆசிரியர் உமா செல்வம் மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடத்தினார். இதில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் அன்புசெல்வி, சத்யா, கலைவாணி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் அம்சவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம். மேல் நிலைப்பள்ளியில் மைண்ட் யூவர் யோகா என்ற தலைப்பில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. பள்ளியின் தலைவர் ஆண்டியப்பன், செயலர் சண்முகம், பொருளாளர் செல்வராஜ், இயக்குனர் பூர்ணவேல், தலைமையாசிரியர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு பழனி கலந்து கொண்டு யோகா சிறப்புகள் பற்றி பேசினார். பின்னர் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். முடிவில் தமிழாசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

சேலம் வைஸ்யா கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். சேலம் தாதகாப்பட்டி மனவளக்கலை மன்ற பேராசிரியர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். இதில் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அயோத்தியாப்பட்டணம் அருகே குமரகிரியில் உள்ள ராயல் பார்க் பள்ளியில் உலக யோகா தின விழா நடைபெற்றது. தாளாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் சாய்கீதா முன்னிலை வகித்தார். பின்னர் பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற் பட்டோர் யோகாசனம் செய்தனர்.

இதேபோல ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி ஜி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் நாராயணன் யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கெங்கவல்லி அருகே வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் அருள்குமார், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ராஜா, முதல்வர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் மாணவர்களுக்கு பல்வேறு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சங்ககிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓம் ராம் அறக்கட்டளை சார்பில் இலவச யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஓம் ராம் குருஜி சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். இதில் ராஜா எம்.எல்.ஏ., சங்ககிரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல வாழப்பாடி வைகை மெட்ரிக் மேல் நிைலப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்கள் சார்பில் மைதானத்தில் பிரமாண்ட கோலம் போடப்பட்டது.

Next Story