வெள்ளகோவிலில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
வெள்ளகோவிலில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் மாந்தபுரத்தில் விவசாய கிணற்றில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்த 2 லாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைக்கண்டித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை. நிலத்தடி நீர் கனிம வளப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதனை எடுப்பதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நிலத்தடி நீரை விற்பனைக்கு எடுக்க தடைவிதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளகோவிலில் உரிமையாளர்கள் தங்களுடைய 21 தண்ணீர் லாரிகள், டிராக்டர்கள், டெம்போக்களை முத்தூர் சாலை பஸ் நிலையம் எதிரில் வரிசையாக நிறுத்தி வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இப்பகுதியில் லாரிகள் மூலம் தினமும் ஏறத்தாழ 6 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் லாரிகள் இயக்கப்படுமா? எனத் தெரிவிக்கவில்லை. இதனால் வெள்ளகோவில் நகரம், புறநகர்ப் பகுதிகளில் வீடுகள், தொழில் சாலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தங்களை வழக்கம்போல தங்கு தடையின்றி தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டுமென லாரி உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story