மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சித்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சித்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், போடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், காமயகவுண்டன்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. சித்த மருந்தில் லேகியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. காரணம் மூலிகைகளால் செய்யப்படும் இந்த லேகியங்களால் உடலுக்கு எந்தவிதமானபக்கவிளைவுகள் ஏற்படாது. அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் வயதான காலங்களில் உடலில் உண்டாகும் மாற்றங்களை எதிர்கொள்ளும் அஸ்வகந்தா லேகியம், சளி, இருமல் மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய நெல்லிக்காய் லேகியம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பபை நீர்கட்டி, வெள்ளைப்படுதல், பெண்மை குறைபாடுகளை நீக்ககூடிய வெண்பூசணி லேகியம், உடல் சூட்டின் காரணமாக வரக்கூடிய மூலநோயை தீர்க்கக்கூடிய தேற்றான்கொட்டை லேகியம் போன்றவையும் சித்தா மருந்துகளில் மிகவும் முக்கியமானது. இந்த லேகியங்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தட்டுப்பாடாக உள்ளது.
மேலும் அம்மா சஞ்சீவி, சர்க்கரை நோயாளிகளுக்கான மாத்திரை பெட்டகம், மூட்டுவலி நோயாளிகளுக்கான மருந்து பெட்டகம், ரத்தகொதிப்பு நோயாளிகளுக்கான மருந்து பெட்டகம் போன்றவற்றை வழங்கி வந்தன. தற்போது மருந்து பெட்டகம் மற்றும் மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சித்த மருந்துகள் தற்போது பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் சித்த மருந்துகள் தட்டுப்பாட்டால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளில் சித்த மருந்துகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story