துறைமுக வழித்தடத்தில் சிமன்ஸ் ரக ரெயில்கள் மட்டுமே இனி இயக்கப்படும் பழைய ரெட்ரோ ரெயில்கள் விடைபெறுகிறது
துறைமுக வழித்தடத்தில் இனிமேல் சிமன்ஸ் ரக ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளது. பழைய ரெட்ரோ ரெயில்களுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளன.
மும்பை,
துறைமுக வழித்தடத்தில் இனிமேல் சிமன்ஸ் ரக ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளது. பழைய ரெட்ரோ ரெயில்களுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளன.
ரெட்ரோ ரக ரெயில்
மும்பையில் மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் பழைய ரெட்ரோ மாடல் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களால் அடிக்கடி ரெயில்சேவை பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் மழைக்காலத்தில் ½ அடி உயரத்துக்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கினாலும் இந்த ரெயில்களை இயக்க முடியாது.
சிமன்ஸ் ரெயில்கள் இயக்கப்படும்
இந்தநிலையில் துறைமுக வழித்தடத்தில் முழுமையாக சிமன்ஸ் ரக ரெயில்களை இயக்க மத்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. தற்போது துறைமுக வழித்தடத்தில் 4 பழைய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 4 ரெயில்களையும் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பழைய ரெயில்களால் துறைமுக வழித்தடத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தன. இனிமேல் முழுமையாக சிமன்ஸ் ரக ரெயில்கள் இயக்கப்பட உள்ளதால் துறைமுக வழிதடத்தில் ரெயில் சேவை பாதிப்பு ஏற்படுவது குறையும்’’ என்றார்.
Related Tags :
Next Story