ஊழியர், காவலாளியை கத்தியால் குத்திவிட்டு டாஸ்மாக் கடையில் ரூ.1½ லட்சம் கொள்ளை; மதுரை அருகே துணிகரம்


ஊழியர், காவலாளியை கத்தியால் குத்திவிட்டு டாஸ்மாக் கடையில் ரூ.1½ லட்சம் கொள்ளை; மதுரை அருகே துணிகரம்
x
தினத்தந்தி 24 Jun 2019 3:45 AM IST (Updated: 24 Jun 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே டாஸ்மாக் கடை ஊழியர், காவலாளியை கத்தியால் குத்திவிட்டு ரூ.1½ லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.

மதுரை,

மதுரை திருமோகூர் புதுதாமரைப்பட்டியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு விற்பனையாளராக முதலைகுளத்தை சேர்ந்த பாண்டி(வயது35) என்பவர் வேலை செய்து வருகிறார். காவலாளியாக திருமோகூரை சேர்ந்த மாணிக்கம்(67) என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை அடைப்பதற்கான ஏற்பாடுகளை பாண்டி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி பணம் தருமாறு மிரட்டினர். பணத்தை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், விற்பனையாளர் பாண்டியை தாக்கி கத்தியால் குத்தினர். இதனை தடுக்க வந்த காவலாளி மாணிக்கத்திற்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து கத்திக்குத்தில் காயமடைந்த பாண்டி, மாணிக்கம் ஆகியோர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story