ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு; போலீசார் தாக்கியதில் வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு, போலீஸ் நிலையம் முற்றுகை


ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு; போலீசார் தாக்கியதில் வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு, போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 24 Jun 2019 4:00 AM IST (Updated: 24 Jun 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் போலீசார் தாக்கியதில் வாலிபர் மயங்கி விழுந்ததாக கூறி போலீஸ்நிலையத்தை ெபாதுமக்கள் முற்றுகையிட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பஸ்நிலையம் அருகில் கோவில் திருவிழாவையொட்டி இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. குறிப்பிட்ட நேரம் முடிந்தும், நிகழ்ச்சி நடைபெற்றதால், போலீசார் ஆடல் பாடலை நிறுத்தக் கூறினர். அதில் நடந்த பிரச்சினையை தொடர்ந்து போலீசார் அங்கிருந்தவர்களை கலைந்து போக கூறினர்.

ஆனால் பொதுமக்கள் திரண்டு நின்றதால், போலீசார் அவர்களை அப்புறப்படு்த்திய போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதில் கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர் கீழே விழுந்தார். அவர் எழுந்திருக்காததால், போலீசார் தாக்கியதில் அவர் மயக்கமாகிவிட்டதாக கூறி பொதுமக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து மயங்கி விழுந்தவர்களின் ஆதரவாளர்கள் நள்ளிரவில் சாக்கோட்டை போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த உயர் அதிகாரிகள் அங்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தனர். அதைத்தொடர்ந்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து மயங்கி விழுந்ததாக கூறப்பட்டவர் நலமாக இருப்பதாக ேபாலீசார் தெரிவித்தனர்.

Next Story