பாண்டுப்பில் மாயமான பெண், சிறுவனுடன் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு தற்கொலையா? போலீஸ் விசாரணை


பாண்டுப்பில் மாயமான பெண், சிறுவனுடன் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு தற்கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 24 Jun 2019 4:15 AM IST (Updated: 24 Jun 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

பாண்டுப்பில் மாயமான பெண், உறவுக்கார சிறுவனுடன் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை, 

பாண்டுப்பில் மாயமான பெண், உறவுக்கார சிறுவனுடன் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிணமாக மீட்பு

மும்பை பாண்டுப் சோனாப்பூர் பகுதியை சேர்ந்த பெண் கதிஜியா (வயது30). இவர் கடந்த வியாழக்கிழமை காலை தனது சகோதரியின் 3 வயது மகன் அப்துல்லாவுடன் வெளியே வந்தார். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிறுவனுடன் மாயமான பெண்ணை தேடிவந்தனர்.

இந்தநிலையில் மாகிம்- பாந்திரா இடையே உள்ள தண்டவாளத்தில் ஒரு பெண்ணும், சிறுவனும் அடிபட்டு கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரெயில்வே போலீசார் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

விசாரணை

இதையடுத்து ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்ட 2 பேரும் பாண்டுப்பில் மாயமான கதிஜா மற்றும் அவரது சகோதாி மகன் அப்துல்லா என்பது தெரியவந்தது.

கதிஜியா, சிறுவனுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தில் சிக்கி பலியானாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story