"தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் விருதுநகர் எம்.பி.க்கு அக்கறை இல்லை" அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு


தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் விருதுநகர் எம்.பி.க்கு அக்கறை இல்லை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் விருதுநகர் எம்.பி.க்கு அக்கறை இல்லை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 108 ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி உடனே தொடங்கப்படும். தொட்டிகளில் நிரப்பி தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி தொகுதியில் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும். இதேபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் தண்ணீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை நகராட்சி, ஊராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள். நாங்கள் தேர்தலுக்காக வேலை செய்பவர்கள் அல்ல. நாங்கள் மக்கள் பணி செய்வதை முதல் வேலையாக செய்து வருகிறோம்.

சிவகாசி பஸ் நிலையம், நகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி்சாமி தொடங்கி வைக்க உள்ளார். சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் சிவகாசியில் தொடங்கி வைக்க உள்ளார். சிவகாசி மையப்பகுதியில் உள்ள சில ரோடுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.

அந்த பகுதியில் உள்ள பாலம் அமைக்க தேவையான பணி தொடங்கப்பட்டு பின்னர் அந்த சாலை சீரமைக்கப்படும். பள்ளி மாணவர்கள் இனி சிரமம் இல்லாமல் பள்ளிக்கு சென்று வரலாம்.

தண்ணீர் பிரச்சினை வராமல் தடுக்க நாங்கள் கூட்டம் போட்டு ஆலோசனை செய்து வருகிறோம். ஆனால் விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் இதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. மக்கள் பிரச்சினைக்கு எப்போதும் அ.தி.மு.க., தி.மு.க. தான் குரல் கொடுக்கும். மற்ற கட்சிகள் எங்கள் 2 கட்சிகள் மீது சவாரி செய்யும். இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற காங்கிரஸ் கட்சி தான் காரணம்.ஆனால் முன்னாள் அமைச்சர் தி.மு.க. கட்சி காங்கிரசை சுமந்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் காங்கிரஸ் கட்சி தான் தி.மு.க.வை சுமந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story