வீடுகளை அகற்ற எதிர்ப்பு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


வீடுகளை அகற்ற எதிர்ப்பு திருவள்ளூர்  கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 25 Jun 2019 3:45 AM IST (Updated: 24 Jun 2019 11:32 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் இருளர் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிலர் அப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடிசைகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 4 குடிசைகளை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் விரைவில் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட அதிகத்தூர் பகுதியை சேர்ந்த திரளான பெண்கள், பொதுமக்கள், கைக்குழந்தைகளுடன் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில அரசியல் குழு செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story