மாவட்ட செய்திகள்

அம்பை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + "||" + Asking for drinking water Panchayat Office The civilian blockade

அம்பை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அம்பை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அம்பை அருகே குடிநீர் கேட்டு, பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை யூனியன் வாகைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 1, 5-வது வார்டு கம்மாளர் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், ஆழ்குழாய் மோட்டார் சீரமைக்கப்படாததை கண்டித்தும் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் பஞ்சாயத்து எழுத்தர் முத்துகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


அப்போது அவர்கள் கூறுகையில், வாகைகுளம் பகுதியில் கருணையாறு வறண்டதால் அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. ஆனால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் மூலம் வரும் தண்ணீரும் கடந்த ஒரு மாதமாக வரவில்லை. சின்டெக்ஸ் ஆழ்குழாய் கிணற்றின் மோட்டார் பழுதடைந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் சரிசெய்யவில்லை என கூறினர்.

பின்னர் பஞ்சாயத்து எழுத்தர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், தாமிரபரணி குடிநீர் திட்ட குழாய் ரோட்டின் மேல்புறம் முதல் கட்டமாக வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. விரைவில் ரோட்டின் கீழ்பகுதிகளுக்கும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணப்பாறையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
3. மங்களமேடு அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
மங்களமேடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. சின்னாளபட்டி அருகே, குடிநீர் கேட்டு கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் செய்த பொதுமக்கள்
சின்னாளபட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
5. மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.