‘பெரியார் வாழ்க’ என்று பதவியேற்பு: நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டதாக கூறி தபாலில் கங்கை நீர் சபாநாயகருக்கு, இந்து மக்கள் கட்சியினர் அனுப்பி வைத்தனர்


‘பெரியார் வாழ்க’ என்று பதவியேற்பு: நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டதாக கூறி தபாலில் கங்கை நீர் சபாநாயகருக்கு, இந்து மக்கள் கட்சியினர் அனுப்பி வைத்தனர்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:15 AM IST (Updated: 25 Jun 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

‘பெரியார் வாழ்க’ என்று சொல்லி தி.மு.க. எம்.பி.க்கள் பதவியேற்றதால் நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டதாகவும், சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறி சபாநாயகருக்கு இந்து மக்கள் கட்சியினர் கங்கை நீரை தபாலில் அனுப்பி வைத்தனர்.

கும்பகோணம்,

இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி தனது கட்சி தொண்டர்களுடன் நேற்று கும்பகோணம் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தார். அவர், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து பாட்டிலில் அடைக்கப்பட்ட கங்கை நீரும், கடிதமும் அனுப்பி வைத்தனர்.

அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டபோது ‘பெரியார் வாழ்க’ என கூறியபடி பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றும், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்றும் கூறியவர் பெரியார். அவர், ஒரு முறை கூட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தில்லை. இந்த நிலையில் அவரது பெயரை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியதன் மூலம் நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டது.

எனவே நாடாளுமன்றத்தின் புனிதத்தை காத்திட இந்த கடிதத்துடன் கங்கை நீர் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நீரினால் நாடாளுமன்றத்தில் சிறப்பு பூஜை செய்திட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story