வெவ்வேறு சம்பவங்களில், பெண் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
உத்தமபாளையம்,
கடமலைக்குண்டு அருகே உள்ள பொன்னன்படுகை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் குமார் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாண்டியம்மாள் கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே மனம் உடைந்த பாண்டியம்மாள் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விச ாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம் மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கும் இவருடைய மூத்த மகனுக்கும் இடையே சொத்துப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ராஜேந்திரன் கடந்த 15-ந்தேதி விஷம் குடித்துள்ளார். பின்னர் அவர் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி சிட்டுத்தாய் தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story