மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
தோகைமலை,
தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முனியப்பன், ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தோகைமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிப்பறை வசதி ஏற்படுத்திதர வேண்டும். கீழவெளியூரில் 50 வருடங்களுக்கு மேலாக இருந்த தாய்சேய் நலவிடுதியை இடித்துவிட்டு, புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்களிலும் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story