குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்த பெண்கள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு பெண்கள் திரண்டு வந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் பையனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மூலம் மின்மோட்டார் இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த மின்மோட்டார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழுதாகிவிட்டது. பின்னர் அந்த மின்மோட்டாரையே சரிசெய்து மீண்டும் இணைப்பு கொடுத்தனர். ஆனால் அந்த மின்மோட்டார் வேலை செய்யாததால் கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வராமல் உள்ளது.
காலிக்குடங்களுடன் வந்த பெண்கள்
இதையடுத்து கடந்த 6 மாதங்களாகவே டிராக்டர் மூலம் வாரத்திற்கு ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை என வினியோகம் செய்து வந்தனர். ஆனால் அதுவும் சரியாக வழங்கப்படவில்லை. இதனால் சீரான குடிநீர் வழங்க கோரி நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று காலிக்குடங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரபாகர், அதிகாரிகளை அந்த கிராமத்திற்கு சென்று பார்த்து தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வழங்க உத்தரவிட்டார்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எங்கள் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் நாங்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றோம். தினமும் கூலி வேலைக்கு செல்லும் எங்களால் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடிவதில்லை. அத்துடன் எங்கள் குழந்தைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சரியான நேரத்திற்கு அனுப்ப முடியாத நிலையில் தவித்து வருகிறோம்.
எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. அங்குள்ள கேட்வால்வையாவது திறந்துவிட்டால் எங்கள் குடிநீர் பிரச்சினையை கொஞ்சம் தீர்த்துகொள்ள முடியும். அதையும் திறக்க மறுக்கின்றனர். அரசு மானியத்தில் 3 வீடுகள் கட்டப்பட்டு வந்தது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அந்த வீடுகள் கட்டும் பணியும் பாதியிலேயே நிற்கிறது. எனவே, எங்களின் அடிப்படை தேவையான குடிநீர் தேவைக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story