குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு


குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 Jun 2019 10:30 PM GMT (Updated: 24 Jun 2019 9:37 PM GMT)

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவை தனது தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேசினார்.

திருச்சி,

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவை தனது தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேசினார். அப்போது பல கிராமங்களை சேர்ந்த மக்கள் தன்னிடம் வழங்கிய கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து குடிநீர் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் தனது தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு அடிப்படை தேவையான சாலை வசதிகளை செய்து கொடுக்கும்படியும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

இதேபோல, லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் மாநில செயலாளர் வையாபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த ஒரு மனுவில், திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம், 33-வது வார்டு ரகுமானியா தெருவில் கடந்த 1970-ம் ஆண்டு வறட்சி நிவாரண நிதியின் மூலம் ஒரு கிணறு வெட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த கிணற்றை பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் கிணற்றை மூடியதோடு அதற்கு செல்லும் பாதையையும் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். தற்போது மாநகராட்சி அதில் உள்ள வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளது. சொத்து வரியும் வசூலித்து வருகிறது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து கிணற்றை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


Next Story