மாவட்ட செய்திகள்

பேட்டை அருகே கால்வாய் கரையில் முருகன் சிலை கண்டெடுப்பு + "||" + Statue of Lord Murugan Found

பேட்டை அருகே கால்வாய் கரையில் முருகன் சிலை கண்டெடுப்பு

பேட்டை அருகே கால்வாய் கரையில் முருகன் சிலை கண்டெடுப்பு
பேட்டை அருகே கால்வாய் கரையில் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
பேட்டை,

நெல்லை அருகே திருவேங்கடநாதபுரத்தை அடுத்த சங்காணி பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இதன் அருகே சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான விவசாயம் நிலம், கால்வாய் அருகே உள்ளது. இவர் வெளிநாட்டில் வசித்து வருவதால் அவரது நிலத்தை முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளி என்பவர் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நிலத்தை சீர்செய்யும் போது அங்கு முருகன் கற்சிலையை கண்டெடுத்துள்ளார். இந்த சிலையை, அவர் வைத்து வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து இந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் முருகன் சிலை கண்டெடுப்பு பற்றி தற்போது அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது. உடனே காளி, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பாளையங்கோட்டை துணை தாசில்தார் மணிகண்டன், முன்னீர்பள்ளம் வருவாய் ஆய்வாளர் கலா, கிராம நிர்வாக அலுவலர்கள் முருகம்மா, சுப்புலட்சுமி ஆகியோர் சிலையை மீட்டு, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்து ஆய்வு மேற்கொண்டு வருகின் றனர்.