அன்னவாசலில் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அன்னவாசலில் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 8:19 PM GMT)

அன்னவாசலில் இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னாவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கம் அன்ன வாசல் ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகம் தொடங்கி வைத்து பேசினார். மாநில பொருளாளர் சங்கர் நிறையுரை ஆற்றினார். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சுப்பையா, ரெங்கசாமி, தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் நாளில் 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கான விடுப்புடன் கூடிய ஊதியத்தை வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கவும், அனைத்து ஊராட்சிகளில் 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும் அனைத்து மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியை கணக்கில் கொண்டு தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்திட வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக அன்னவாசல் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அலுவலரிடம் மனு கொடுத்தனர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறினார். 

Next Story