மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் கைது


மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2019 9:45 PM GMT (Updated: 2019-06-26T01:58:08+05:30)

மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை காட்கோபர் மேற்கு பாட்வாடி பகுதியில் பொதுகழிவறை உள்ளது. இந்த கழிவறையை அந்த பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், அந்த கழிவறையை அகற்ற வார்டு அதிகாரி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் சுதாம் ஷிண்டே என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர் பாக அவர் மாநகராட்சி அதி காரிகளிடம் புகார் தெரிவித்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் சி.எஸ்.எம்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த சுதாம் ஷிண்டே தான் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொள்ள முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பிடித்துக்கொண்டனர்.

அப்போது அவர் போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story