முதல்-மந்திரியின் தண்ணீர் கட்டண பாக்கியை செலுத்த பிச்சை எடுக்கும் போராட்டம்


முதல்-மந்திரியின் தண்ணீர் கட்டண பாக்கியை செலுத்த பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:15 AM IST (Updated: 26 Jun 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பங்களா வைத்துள்ள தண்ணீர் கட்டண பாக்கியை செலுத்த தேசியவாத காங்கிரஸ் இளைஞர் அணியினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

மும்பை,

மும்பை மாநகராட்சிக்கு மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட மந்திரிகள் ரூ.8 கோடி வரை தண்ணீர் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்து உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்து உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்தநிலையில், முதல்-மந்திரி மற்றும் மாநில மந்திரிகள் வைத்து உள்ள தண்ணீர் கட்டண பாக்கியை செலுத்துவதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் நேற்று சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் எதிரில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அக்கட்சியின் இளைஞரணி செயல் தலைவர் சூரஜ் சவான் கூறியதாவது:-

சாதாரண மக்கள் ஒரு மாதமோ அல்லது 2 மாதமோ தண்ணீர் கட்டணம் பாக்கி வைத்தால் மாநகராட்சி தண்ணீர் இணைப்பை துண்டித்து விடுகிறது. ஆனால் முதல்-மந்திரி பங்களா பல மாதம் தண்ணீர் கட்டண பாக்கி வைத்து உள்ளது. அந்த பாக்கியை செலுத்துவதற்காக தான் நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

அடுத்த 4 அல்லது 5 நாட்களில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் அதிகாரப்பூர்வ பங்களாவுக்கு பேரணியாக சென்று தண்ணீர் இணைப்பை துண்டிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story