சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:45 AM IST (Updated: 26 Jun 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு 150 நாட்கள் வேலையும், தினமும் ரூ.229 சம்பளமும் வழங்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் துணை செயலாளர் முத்துக் கருப்பன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் மணியம்மா, மாவட்டத் தலைவர் தண்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வேங்கையா, கந்தசாமி, பஞ்சவர்ணம், பாண்டி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story