வானூர் அருகே, தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
வானூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்,
வானூர் அருகே உள்ள கழுப்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் அசோக்குமார் (வயது 33). இவர் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அசோக்குமார், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதையறிந்த இருவரின் பெற்றோரும் அசோக்குமாரை அழைத்து சமாதானம் செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில் மனஉளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக கூறிச்சென்ற அசோக்குமார், அதே பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story