எடப்பாடி அருகே, பெண் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி


எடப்பாடி அருகே, பெண் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 26 Jun 2019 4:15 AM IST (Updated: 26 Jun 2019 5:57 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியானார்.

எடப்பாடி, 

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி விஜயா (வயது 43). இவர்களுக்கு விஷ்ணுபிரியா (23) என்ற மகளும், திருலோகசுந்தர் (20) என்ற மகனும் உள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் விஜயா சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயா அந்த பகுதியில் தனது ஸ்கூட்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். பின்னர் கோனேரிப்பட்டியில் இருந்து பூலாம்பட்டி நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலுவம்பாளையம் அருகே நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது.

தொடர்ந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story