63 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி


63 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 26 Jun 2019 4:00 AM IST (Updated: 26 Jun 2019 5:58 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், 63 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 5 மாத பயிற்சி தொடங்கியது.

திண்டுக்கல், 

தமிழ்நாடு போலீஸ் துறையில் போலீஸ்காரராக சேர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு 5 மாத பயிற்சி அளிக்கப்பட்டு, சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்படும். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்் ஆனவர்களுக்கு, சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

இதில் பலர் 55 வயதை கடந்து விட்டதால், பயிற்சிக்கு முன்பு விருப்பம் கேட்கப்பட்டது. அதன்பேரில் மாநிலம் முழுவதும் 1,278 பேர் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெறுவதற்கான, பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு, போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 30 பேரும், தேனி மாவட்டத்தில் 33 பேரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். இவர்களுக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதனை டி.ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார், திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து 63 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சின்னக்கண்ணு, வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இங்கு மனித உரிமை, இ்ந்திய தண்டனை சட்டம், அறிவியல் மற்றும் மருத்துவ சான்றுகளின் அடிப்படையில் புலன்விசாரணை நடத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக 2 மாத காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்பிறகு போலீஸ் நிலையங்களில் 3 மாதம் பயிற்சி வழங்கப்படும். இந்த 5 மாத பயிற்சியை நிறைவுசெய்து தேர்ச்சி பெறுபவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்படும்.

Next Story