வானவில் : 7 பேர் பயணிக்கும் ‘ரெனால்ட் டிரைபர்’


வானவில் :  7 பேர் பயணிக்கும் ‘ரெனால்ட் டிரைபர்’
x
தினத்தந்தி 26 Jun 2019 7:13 AM GMT (Updated: 26 Jun 2019 7:13 AM GMT)

ஏறக்குறைய இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியச் சந்தையில் புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது ரெனால்ட்.

7 பேர் பயணிக்கும் வகையிலான காம்பேக்ட் மாடலை டிரைபர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக 3 வரிசை இருக்கைகளைக் கொண்டதாக இந்த எஸ்.யு.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் நிறுவனத்தின் கிவிட் மாடல் காருக்குப் பிறகு இப்போதுதான் புதிய மாடல் கார் அறிமுகமாகிறது. பார்ப்பதற்கு கிவிட் மாடலைப் போன்று தோற்றமளித்தாலும், முகப்பு விளக்கு, கிரில், கிளாம்ஷெல் பானெட் உள்ளிட்டவை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. மேலும் இதில் ரூப் ரெயில்ஸ் உள்ளது கம்பீரமான தோற்றப் பொலிவை அளிக்கிறது.

இதன் உள்புறம் இரட்டை வண்ணங்களில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் 3.5 அங்குல எல்.சி.டி. திரையும், இன்போடெயின்மென்டுக்கு 7 அங்குல தொடு திரையும் உள்ளது. இது ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளத்தில் செயல்படக் கூடியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதாவது கார் ஓட்டுவதில் உள்ள குறைபாடுகளைத் தெரிவிக்கும் வகையில், டிரைவிங் ஸ்டைலை உணர்த்தும் வகையில் நுட்பம் இதில் உள்ளது. இருக்கையின் இரண்டாவது வரிசை அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் உள்ளது. மடக்கும் வகையில் இருப்பதால் அதிக அளவிலான இடவசதி கிடைக்கும்.

மேலும் மூன்றாவது வரிசையில் அமர்வோருக்கும் ஏ.சி.யின் குளிர்ச்சி பரவும் வகையில் ஏ.சி. வென்ட் உள்ளது சிறப்பம்சமாகும். கை வைப்பதற்கான வசதி மற்றும் மொபைல் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் முன்னிருக்கையில் 2 ஏர் பேக்குகளைக் கொண்டதாக இது வந்துள்ளது. ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார், அதிவேக எச்சரிக்கை உணர் கருவி, ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிஉள்ளது. 1 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. 5 ஸ்பீடு மானுவல் கியர் பாக்ஸைக் கொண்டது. பிரீமியம் ஹேட்ச்பேக் காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலாக இது வந்துள்ளது. இந்தப் பிரிவில் இப்போதைக்கு வேறு எந்த நிறுவன மாடலும் போட்டிக்கு கிடையாது. இதன் விலை குறைவாக இருப்பதால் இதற்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கும் என்று தெரிகிறது.

Next Story