வானவில் : யமஹா பேட்டரி ஸ்கூட்டர் இ.சி05


வானவில் :  யமஹா பேட்டரி ஸ்கூட்டர் இ.சி05
x
தினத்தந்தி 26 Jun 2019 12:51 PM IST (Updated: 26 Jun 2019 12:51 PM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் திகழும் யமஹா நிறுவனம் இ.சி05 என்ற பெயரில் பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டரை தயாரித்துள்ளது.

தைவானைச் சேர்ந்த கோகோரோ என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்கூட்டரை யமஹா தயாரித்துள்ளது. ஸ்கூட்டருக்கான வடிவமைப்பை யமஹா நிறுவனமும், பேட்டரி உள்ளிட்ட என்ஜின் பாக வடிவமைப்பை கோகோரோ நிறுவனமும் உருவாக்கியுள்ளன.

இந்த பேட்டரி ஸ்கூட்டர் பார்ப்பதற்கு மிகச் சிறந்த தோற்றத்துடன் எல்.இ.டி. முகப்பு விளக்குகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள பேட்டரி ஸ்கூட்டர்களின் தோற்றப் பொலிவைக் காட்டிலும் இது மிகவும் மேம்பட்ட வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது.

முழுவதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. சாவி தேவைப்படாத தொழில்நுட்பத்தைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தைவானைச் சேர்ந்த கோகோரோ நிறுவனம் பேட்டரி சார்ஜிங் மையங்களையும் அமைத்து வருகிறது. இந்நிறுவனம் தைவானில் ஆயிரத்திற்கும் மேலான சார்ஜிங் மையங் களை உருவாக்கியுள்ளது. இதனால் முதல்கட்டமாக இந்த பேட்டரி ஸ்கூட்டரை தைவானில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது யமஹா. இதைஅடுத்து இந்தியாவிலும் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story