வானவில் : ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிஷன்
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் மாடல் காரில் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காம்பாக்ட் செடான் பிரிவில் அறிமுகமாகியுள்ளது. அமேஸ் மாடல் கார் அறிமுகமாகி 13 மாதங்களில் ஒரு லட்சம் விற்பனையை எட்டியுள்ளதைக் கொண்டாடும் வகையில் இந்த ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்படுகிறது. மொத்தமே 840 கார்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.
கருப்பு நிற அலாய் சக்கரங்கள், கதவுகளில் வைஸர், லிட்மவுன்டட் ஸ்பாயிலர் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏஸ் சிறப்பு எடிஷனில் 1.2 லிட்டர் ஐ.வி.டெக் பெட்ரோல், 1.5 லிட்டர் ஐ.டி.டி.இ.சி. டீசல் என்ஜின் உள்ள கார்கள் கிடைக்கிறது.
இவை இரண்டுமே 5 கியர்களைக் கொண்டவையாகும். மாருதி சுஸுகி டிஸையர், போர்டு அஸ்பயர், போக்ஸ்வேகன் அமெயோ, ஹூண்டாய் எக்ஸென்ட் உள்ளிட்ட மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
Related Tags :
Next Story