வானவில் : பின்புற கேமரா வசதியுடன் செயல்படும் ஸ்மார்ட் ஹெல்மெட்


வானவில் : பின்புற கேமரா வசதியுடன் செயல்படும் ஸ்மார்ட் ஹெல்மெட்
x
தினத்தந்தி 26 Jun 2019 1:00 PM IST (Updated: 26 Jun 2019 1:00 PM IST)
t-max-icont-min-icon

வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் போது தலைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க ஹெல்மெட் அணிவது அவசியம். பார்டர்லெஸ் நிறுவனம் கிராஸ் என்னும் ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஹெல்மெட் அணிந்திருப்பவர், சாலையில் எந்த வகையான சத்தங்களை மட்டும் கேட்கலாம் என்று தேர்வு செய்து கொள்ளலாம்.

உதாரணமாக அருகே வரும் வண்டிகளின் ஹாரன் சத்தம் என்று தேர்வு செய்து கொண்டால் மற்ற இரைச்சலான ஒலிகள் அவருக்கு கேட்காது. கிராஸ் சவுண்ட் கண்ட்ரோல் என்னும் சிறிய சாதனம் இதனுள் இருப்பதால் தேவையற்ற ஒலிகளை செயலிழக்க செய்து தேவையான சத்தங்களை மட்டுமே கேட்கச் செய்கிறது. இதனால் கவனச்சிதறல் இன்றி வாகனம் ஓட்ட முடியும். இந்த ஹெல்மெட்டின் பின்புறம் கேமரா உள்ளது.

பின் புறமிருப்பதை ஹெல்மெட்டின் முன்புறத்திரையில் தேவைப்படும் போது பார்த்துக் கொள்ளலாம். ஜி.பி.எஸ். மூலமாக வழி காட்டியாகவும் செயல்படுகிறது.

அன்றைய வானிலையையும் ஹெல்மெட்டில் தெரிந்து கொள்ளலாம். நண்பர்கள் கூட்டாக வெவ்வேறு பைக்குகளில் பயணிக்கும் போது போனை கையில் எடுக்காமலேயே ஹெல்மெட்டின் மூலமே பேசிக் கொள்ளலாம். செயலியின் துணையுடன் செயல்படும் இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story