வானவில் : குறைந்த செலவில் ஏ.சி. காற்று சுத்திகரிப்பான்
இப்போது நகர்ப்பகுதி வீடுகளில் ஏ.சி.க்கள் உபயோகிக்கும் அளவுக்கு அறையில் சுத்தமான காற்று நிலவ காற்று சுத்திகரிப்பானை பயன்படுத்த வேண்டியுள்ளது.
இதற்காக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரமாவது செலவிட வேண்டியுள்ளது. ஆனால் இதற்கு தீர்வு கண்டுள்ளது டெல்லியைச் சேர்ந்த ஐ.ஐ.டி. ஸ்டார்ட் அப்.
வெறும் ரூ.399 செலவில் உங்கள் வீட்டில் உள்ள ஏ.சி.யை குளிர்ந்த காற்று வீசச் செய்வதோடு சுத்தமான காற்றையும் வீசுமாறு காற்று சுத்திகரிப்பானாகவும் மாற்ற முடியும். இதற்கு இந்நிறுவனம் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் மிகவும் எளி தானது. இவர்கள் நானோகிளன் பில்டரை உருவாக்கிஉள்ளனர்.
இதைப் பயன்படுத்துவதன் மூலம் தற்போது புழக்கத்தில் உள்ள காற்று சுத்திகரிப்பானுக்கு இணையான தூய்மையான காற்றை உங்கள் ஏ.சி.யில் பெறலாம். ஒரு பேக்கில் இரண்டு நானோ கிளன் ஏ.சி. பில்டர் இருக்கும். ஒவ்வொன்றும் இரண்டு அடங்கிய 3 பவுச்களை ரூ.900 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது.
பொதுவாக எல்லா ஏ.சி.களிலும் பிளாஸ்டிக்கினால் ஆன மெஷ் இருக்கும். அதன் மேல் பகுதியில் இந்த நானோ கிளன் பில்டரை ஒட்டிவிட வேண்டியதுதான். சரியாக பொருந்தும் வகையில் இரண்டு பக்கமும் டேப் உள்ளது. இதை கூடுதலாக ஒட்டுவதால் ஏ.சி.யின் செயல்பாடு எந்த வகையிலும் பாதிக்காது. இதற்காக கூடுதலாக மின்சாரமும் செலவாகாது. ஏ.சி. இயங்கும் அறையில் பொதுவாக மூடப்பட்டிருக்கும்.
இதனால் அங்கு உள்ள காற்றில் மிக நுண்ணிய துகள்கள் இருக்கும். அறையில் உள்ள காற்றை சுழற்சி அடிப்படையில் குளிர்விக்கும் ஏ.சி.யினுள் செல்லும் காற்று இந்த நானோ கிளன் பில்டரால் சுத்தப்படுத்தப்பட்டு தூய்மையான காற்றாக வெளிவரும். இது செயல்படுவதால் 90 சதவீதம் தூய்மையான காற்று உங்கள் அறையில் நிலவும். 1.5 டன் ஏ.சி. இயங்கும் அறையில் உள்ள காற்றை 55 நிமிடங்களில் சுத்தமாக்கிவிடும். இதனால் காற்று சுத்திகரிப்பானுக்கு தனி மின் இணைப்பு தேவையில்லை.
காற்று சுத்திகரிப்பானுக்கு ஆயிரக் கணக்கில் செலவிட வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஏ.சி.யை வெறும் ரூ.400 செலவில் சுத்தமான காற்றை அளிக்கும் ஏ.சி.யாக மாற்றிவிடலாம்.
Related Tags :
Next Story