அடங்கல் சான்றிதழ் பெற விரும்பும் விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
அடங்கல் சான்றிதழ் பெற விரும்பும் விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரி கூறினார்.
கரூர்,
அடங்கல் சான்று பெற விரும்பும் விவசாயிகள் இனி ஆன்லைன் மூலமாகவே அதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்யும் வகையிலா வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன தகவல்களை விவசாயிகள் வழங்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நலத்திட்ட உதவிகள்
அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் அடங்கல் சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறையை தமிழக அரசின் வருவாய்த்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் குறித்த விபரம்், அவர்கள் என்னென்ன பயி்ர்களை பயிரிட்டுள்ளார்கள் என்ற விபரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். இதனால், புயல், வெள்ளம், வறட்சி ஏற்படும் காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தகவல்களை எளிதில் அறிந்து அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை உடனடியாக கொண்டு சேர்க்க முடியும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
தற்போது உள்ள நடைமுறைப்படி அடங்கல் சான்றிதழ் பெற எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து அதன்பின்னர் வருவாய்த்துறையினரால் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபின்னரே சான்றிதழ் வழங்கப்படுகின்றது. அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் அடங்கல் சான்றிதழ் பெறவிரும்பும் விவசாயிகள் தங்கள் நிலம், பயிரிடப்பட்டுள்ள பயிர் உள்ளிட்ட தகவல்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்குச்சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு ஆன்லைன் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்கும்போது என்னென்ன தகவல்களை கொண்டு வரவேண்டும், எவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரி விஜயலெட்சுமி இந்த பயிற்சியை வழங்கினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மோகன்ராம் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story