மாவட்ட செய்திகள்

திருப்பூரில் வணிக நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்பவர்கள் மீது நடவடிக்கை; விவசாயிகள் கோரிக்கை + "||" + Action on sellers of water for commercial enterprises; Farmers demand

திருப்பூரில் வணிக நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்பவர்கள் மீது நடவடிக்கை; விவசாயிகள் கோரிக்கை

திருப்பூரில் வணிக நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்பவர்கள் மீது நடவடிக்கை; விவசாயிகள் கோரிக்கை
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள சப்–கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. செண்பகவல்லி தலைமை தாங்கினார். திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். இதுமட்டுமின்றி கோரிக்கைகளை மனுக்களாகவும் கொடுத்தனர். அந்த வகையில் விவசாயிகள் முன்வைத்து பேசிய கோரிக்கைகளின் விவரம் வருமாறு:–

விவசாயிகளுக்கு தேவையான இரும்பு கலப்பைகள், வரப்பு வெட்டும் கருவி மற்றும் மண்வெட்டி, கடப்பாறை மற்றும் அரிவாள், கொத்து ஆகியவை முன்பு வேளாண்மை கிடங்குகளில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த உபகரணங்கள் வழங்கப்படவில்லை. எனவே வேளாண்மை துறை சார்பாக வேளாண்மை உபகரணங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லூர் முதலிபாளையம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டியுள்ளது. அங்கு செல்ல சாலை போக்குவரத்து இல்லை. இதனால் நல்லூர் மற்றும் முதலிபாளையம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பொதுவான கால்நடை மருத்துவமனையை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.ஏ.பி. பாசன 4–வது மண்டல பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தண்ணீரை பிரித்து கொடுக்கும் மதகுகள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டப்பட்டது. தற்போது அவை பழுதாகிவிட்டதால் பாசன காலங்களில் நீரை பங்கிடுவதில் விவசாயிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதகுகளை சரி செய்வதுடன், 4–வது மண்டல பகுதியான பெருந்தொழுவு பகுதிக்கும் மற்ற பகுதிகளை போல, 7 நாட்கள் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலிபாளையம் புதுப்பாளையம் வெங்ககல் தோட்டம் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடிநீர் வேகமாக குறைந்ததை தொடர்ந்து 1500 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீரை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் எங்கள் பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் தனது நிலத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் உள்ள தண்ணீரை எடுத்து வர்த்தக நிறுவனங்களுக்கு நாள் ஒன்றிற்கு சுமார் 2 லட்சம் லிட்டர் தண்ணீரை விற்பனை செய்து வருகிறார். இதனால் மேலும் எங்கள் பகுதிகளில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தண்ணீர் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோல வீரபாண்டி கிராமம் இடுவாய்பாளையம் மற்றும் வஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் தோட்டத்தில் உள்ள கிணறுகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பூர் மாநகரின் மைய பகுதியில் இருந்தும், மங்கலம், இடுவாய், ஆண்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தங்கள் தேவைக்கு சான்றிதழ்கள் பெற சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்று வர போதிய பஸ்வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு பழைய பஸ்நிலையத்தில் இருந்து செல்வதற்கான பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.செட்டிபாளையத்தில் இருந்து சின்னாண்டிபாளையம் வழியாக ஓடை ஒன்று செல்கிறது.

மழை காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த மழை நீர் கடைசியில் நொய்யலில் சென்று வீணாக கலந்து வருகிறது. இதனால் இந்த ஓடையின் குறுக்கே 2 இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் விரிவாக்கப்பகுதியில் உள்ள பி.ஏ.பி. பிரதான பாசன வாய்க்கால் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைந்து வருகிறது. இந்த நிலையில் பி.ஏ.பி. பிரதான மற்றும் கிளை வாய்க்கால்கள் புதர்மண்டி கிடப்பதுடன், பல இடங்களில் மண் மேடாகவும் காட்சியளிக்கிறது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து பி.ஏ.பி. பிரதான வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பேசினார்கள். இந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. செண்பகவல்லி தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆடு மேய்க்க சென்ற விவசாயி வெட்டிக்கொலை
ஓசூர் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
ஓமலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. சின்னசேலத்தில் விவசாயி திடீர் சாவு
சின்னசேலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி திடீரென இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
4. மனைவியை எரித்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை - கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை எரித்துக்கொன்ற விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
5. திருமருகல் அருகே பஸ் மோதி விவசாயி பலி தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு
திருமருகல் அருகே பஸ் மோதி விவசாயி பலியானார். தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை