குப்பைக்கிடங்கிற்கு தீ வைப்பு புகையால் பொதுமக்கள் அவதி
குப்பை கிடங்கிற்கு நேற்று மர்ம நபர்கள் யாரோ தீவைத்து விட்டனர். இதில் இருந்து வெளியேறிய புகை அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்றதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தடங்கம் கிராமத்தில் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் தர்மபுரி நகராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கை அமைத்தது. தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள் வாகனம் மூலம் எடுத்து சென்று தடங்கம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கிற்கு நேற்று மர்ம நபர்கள் யாரோ தீவைத்து விட்டனர். இதில் இருந்து வெளியேறிய புகை அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்றதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Related Tags :
Next Story