15 நாட்களுக்குள் கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் பேட்டி


15 நாட்களுக்குள் கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2019 4:07 AM IST (Updated: 27 Jun 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

15 நாட்களுக்குள் கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது. இதில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சியை எவ்வாறு முன்னெடுத்து செல்வது, பலப்படுத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசித்தோம். கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டுள்ளது.

கடுமையான விதிமுறைகள்

புதிய நிர்வாகிகள் அடுத்த 15 நாட்களுக்குள் நியமிக்கப்படுவார்கள். அதன் பிறகு மாவட்ட, வட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமன பணிகள் தொடங்கப்படும். இந்த பணிகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும். புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு கடுமையான விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அந்த விதிமுறைகளின்படியே நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள். தகுதி, திறமை படைத்தவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும்.

பஞ்சாயத்துகளுக்கு தனியாக தலைவர்கள் நியமனம் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். மாநில தலைவர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம்கள் நடத்த உள்ளோம். இதில் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு கே.சி.வேணு கோபால் கூறினார்.

Next Story