பண்ருட்டி நகரசபை முன்னாள் துணைத்தலைவர் கடத்தல் வழக்கில் - மேலும் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


பண்ருட்டி நகரசபை முன்னாள் துணைத்தலைவர் கடத்தல் வழக்கில் - மேலும் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 Jun 2019 4:27 AM IST (Updated: 27 Jun 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி நகரசபை முன்னாள் துணைத்தலைவரை கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர்,

பண்ருட்டி நகரசபை முன்னாள் துணைத்தலைவர் விஜயரங்கன் என்பவரை ஓராண்டுக்கு முன்பு ஒரு கும்பல் கடத்திச்சென்றது. இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை சேர்ந்த செல்வா, சுபாஷ் என்கிற ராஜீ, விஜி என்கிற விஜயகுமார், வாசு, கார்த்திகேயன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இவர்களில் செல்வா, சுபாஷ், விஜி, வாசு ஆகியோர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடைய கூட்டாளியான பண்ருட்டி அவ்வையம்பாளையம் தெருவைச்சேர்ந்த கார்த்திகேயன் என்கிற கார்த்தி(வயது 37) மீது முன்னாள் நகரசபை துணைத்தலைவரை கடத்திய வழக்கு மட்டுமின்றி அழகப்பசமுத்திரத்தைச்சேர்ந்த மாயவேல்(48) என்பவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறித்து சென்றதாக ஒரு வழக்கும் உள்ளது.

எனவே அவரின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவுப்படி கார்த்திகேயன் என்ற கார்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

Next Story