டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 27 Jun 2019 3:45 AM IST (Updated: 27 Jun 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் இளநிலை உடற்கல்வியியல் ( B.P.Ed ) இரு வருட படிப்பு, ( M.P.Ed) முதுகலை உடற்கல்வியியல் பட்டப்படிப்பு இரண்டு வருட படிப்பு ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இக்கல்லூரி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. மேலும் தேசிய தர மதிப்பீட்டுக்குழு மறு மதிப்பீட்டில் கி சான்று வழங்கி உள்ளது.

உலக அளவிலான உள்விளையாட்டு அரங்கம், வெளி விளையாட்டுகளுக்கு தேவையான விளையாட்டு மைதானங்கள், தரம் வாய்ந்த உடற்கல்வி அறிவியல் ஆய்வகங்கள், தரமிக்க நூலக வசதி, இருபாலரும் தங்குவதற்கு தனித்தனி விடுதி வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கல்லூரியில் உள்ளன.

மேலும் இங்கு பயிலும் மாணவர்களுக்கு NET மற்றும் SET தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அளவில் மாணவ, மாணவிகள் பதக்கங்கள் பெற்று வருகின்றனர். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பை பெற்று தருகிறது

இக்கல்லூரியில் B.P.Ed இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. இதில் சேர இளநிலை பட்டப்படிப்பு உடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கு பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். மாணவ-மாணவியர் பட்டப்படிப்பு படிக்கும்போது பல்கலைக்கழகம் சார்பில் ஏதேனும் ஒரு விளையாட்டில் பங்கு பெற்றிருந்தால் அவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

M.P.Ed இரண்டு ஆண்டு பட்டமேற்படிப்பு சேர இளநிலை உடற்கல்வியியல் பயின்று இருக்க வேண்டும். ஙி.றி.ணிபீ அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி வேண்டும். மாணவ, மாணவியர்கள் வயது 35-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் ( B.P.Ed ) பயின்றவர்களுக்கு M.P.Ed படிக்க கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். இக்கல்லூரி பற்றிய அனைத்து விவரங்கள், பட்டப்படிப்பிற்கான கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், கல்லூரி விதிமுறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் ஆகியவை கல்லூரியின் WWW.drsacpe.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அலுவலகத்தில் நேரிலோ அல்லது கல்லூரி தொலைபேசி எண் 04639-245110 மற்றும் 04639-220590 ஆகியவற்றிலோ தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் முனைவர் செ.பெவின்சன் பேரின்பராஜ் தெரிவித்து உள்ளார். 

Next Story