தன்னை தாக்கிய நடிகர் சல்மான்கான் மீது நடவடிக்கை டி.வி. நிருபர் கோர்ட்டில் மனு
தன்னை தாக்கிய நடிகர் சல்மான் கான் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக்கோரி மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் டி.வி. நிருபர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை,
மும்பையை சேர்ந்த டி.வி. நிருபர் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் பாந்திரா பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு நடிகர் சல்மான்கான் தனது மெய்காவலர்கள் இருவருடன் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
இதை கவனித்த டி.வி. நிருபர் தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். இதை பார்த்து கோபம் அடைந்த சல்மான்கானின் மெய்காவலர்கள் அவரை பிடித்து அடித்து உள்ளனர்.
நடிகர் சல்மான்கானும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
கோர்ட்டில் மனு தாக்கல்
இதுபற்றி டி.வி. நிருபர் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். ஆனால் போலீசார் அவர் புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் தன்னை தாக்கிய நடிகர் சல்மான்கான் மற்றும் அவரது மெய்காவலர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு அடுத்த மாதம்(ஜூலை) 12-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story