மும்பை உள்பட மாநிலம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பை உள்பட மாநிலம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பையில் 15 நாட்கள் தாமத்திற்கு பிறகு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இருப்பினும் இன்னும் மழை தீவிரம் அடையவில்லை. அவ்வப்போது சாரல் மழையாகவே பெய்கிறது. நேற்று அந்தேரி, சாந்தாகுருஸ், மாட்டுங்கா பகுதியில் மழை பெய்தது.
வானில் கருமேகங்கள் திரண்டாலும் மந்தமான வானிலையே நிலவியது. மும்பை மட்டுமின்றி மாநிலத்தின் மற்ற இடங்களிலும் இதே நிலை தான்.
பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
பருவமழை தீவிரம் அடையாத நிலையில் கிராம பகுதிகளிலும் மாநில அரசு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 29-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மும்பை, கொங்கன், விதர்பா, மரத்வாடா என மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story