ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மண் பானையுடன் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மண் பானையுடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நீடாமங்கலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மண் பானையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே தேவங்குடியை அடுத்த கற்கோயில் கிராமத்தில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மண் பானையுடன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் தலைமை தாங்கினார்.

இதில் பெண்கள் உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Next Story