பெண் குழந்தை பிறந்தால் கொண்டாட வேண்டும் கலெக்டர் ஆனந்த் பேச்சு
பெண் குழந்தை பிறந்தால் கொண்டாட வேண்டும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண் குழந்தை பிறந்தால் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அனைவரும் கொண்டாட வேண்டும். மகளும், மகனும் சமம் என கருதி வளர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது முக்கியமாகும். குழந்தை பிறக்கும் முன்பு பாலினம் அறிய முயல்வது சட்டப்படி குற்றமாகும். இதுபற்றி புகார் தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்த நோக்கத்தில் உலக பெண் குழந்தை தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அதனை தொடர்ந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களை கலெக்டர் சந்தித்து வாழ்த்துகள் கூறினார். அனைத்து தாய்மார்களுக்கும் இரும்பு சத்து நிறைந்த இனிப்புகளும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் குறித்த வழிகாட்டி பிரசுரங்கள், பழங்கள், மரக்கன்றுகளை வழங்கினார்.
இதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் உமா, துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story