ஒரத்தநாடு அருகே பெண் தற்கொலை;போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு பெற்றோர் மீது வழக்கு


ஒரத்தநாடு அருகே பெண் தற்கொலை;போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு பெற்றோர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Jun 2019 3:45 AM IST (Updated: 28 Jun 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரித்த அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தொண்டராம்பட்டு கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், இவருடைய மனைவி லெட்சுமி. இவர்களுடைய மகள் அருள்மொழி (வயது22). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தென்னரசு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அருள்மொழி அவரது தந்தை அன்பழகன் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று இரவு அருள்மொழி விஷத்தை குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசுக்கு தெரியாமல் அருள்மொழியின் உடலை அவரது பெற்றோர் இரவோடு-இரவாக அதே ஊரில் உள்ள சுடுகாட்டில் எரித்து விட்டனர்.

பெற்றோர் மீது வழக்கு

இதுகுறித்து தொண்டராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அன்பழகன் மற்றும் அவருடைய மனைவி லெட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story